கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொவிட் 19 தொற்று மற்றும் சாவு விபரங்களை Santé publique France வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 66, 564 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 24 மணிநேரத்தில் 1,218 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து குணமடைந்து 748 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதேவேளை, மருத்துவமனையில் இந்த 24 மணிநேரத்தில் 41 பேர் மரணித்துள்ளனர்.
பிரான்சில் எட்டாவது கொவிட் 19 தொற்று அலை இடம்பெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ள Santé publique France, இதுவரை பிரான்சில் 156,000 பேர் வரை மரணித்துள்ளதாகவும், அவர்களில் 126 159 பேர் மருத்துவமனைகளில் மரணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.