அதிகளவு மாசு வெளியிடும் வாகனங்கள் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது. தானியங்கி முறையில் குற்றப்பணமும் அறவிடப்பட உள்ளது.
அதன்படி, குறைந்த மாசு வளிமண்டலப்பகுதிகளில் (Zones à faibles émissions) சில வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெளியிடும் மாசின் அளவு Crit'air ஒட்டிகள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அதிக மாசினை வெளியிடும் Crit'air 4 மற்றும் 5 ஆகிய ஒட்டிகள் கொண்ட வாகனங்கள் மேற்குறித்த Zones à faibles émissions பகுதிகளில் பயணித்தால், தானியங்கி முறையில் குற்றப்பணம் அறவிடப்படும்.
ஒருதடவைக்கான குற்றப்பணமாக 68 யூரோக்கள் அறவிடப்படும் எனவும் அறிய முடிகிறது. இந்த சட்டமானது வரும் 2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என அறிய முடிகிறது.
**
தலைநகர் பரிசில் சோம்ப்ஸ்-எலிசே Zones à faibles émissions பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தற்போது நாடு முழுவதும் 18 இடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.