எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய நிலவரப்படி 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 14.5 சதவீதமான நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து இந்த எரிபொருள் விநியோக தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை நிலவரப்படி நாட்டின் 25 மாவட்டங்களில் 20 சதவீத நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விநியோக தடையின் காரணமாக மூடப்பட்டுள்ளது.
10 சதவீத ஊதிய உயர்வு கோரி CGT தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதன்காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.