மகிழுந்து கடத்தலில் தொடர்புடைய முக்கிய குழு ஒன்றை பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டின் பல பாகங்களில் இருந்து மொத்தமாக 31 பேர் கைது செய்யப்படுள்ளனர்.

நவீன முறையில் ஆடம்பர மகிழுந்துகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தியவர்களே கைது செய்யபட்டுள்ளனர். மகிழுந்துகளில் இலத்திரனியல் பூட்டினை கணணியின் உதவியுடன் உடைத்து திருடக்கூடிய நவீன கொள்ளையர்கள் என ஜொந்தாமினர் தெரிவித்தனர்.

நீண்டகால விசாரணைகளின் பின்னர், Paris, Marseille, Lyon, Lille போன்ற பெரு நகரங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 2020 ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு வரை 2.7 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள மகிழுந்துகளை இவர்கள் திருடியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த கைது நடவடிக்கையில் 200 ஜொந்தாமினர் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட 31 பேரும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.