பரிசில் நேற்று இரவு 12 வயது சிறுமி ஒருவரது சடலம் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் ஆறு பேரினை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் rue d'Hautpoul வீதியில் வீசப்பட்டிருந்த சூட்கேஸ் பெட்டி ஒன்றில் குறித்த சிறுமியின் சடலம் இருந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், சற்று முன்னர் வெளியிடப்பட்ட உடற்கூறு பரிசோதனையில் குறித்த சிறுமி மூச்சுத்திணறலுக்கு (Asphyxiation) உள்ளாகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்