எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, அதிக விலைக்கு பெற்றோல் விற்ற ஐவர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இக்கைது சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு Arcueil, Val-de-Marne நகரில் இடம்பெற்றுள்ளது. 19 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஐவர் கொண்ட குழு அதிக விலைக்கு பெற்றோல் விற்றுள்ளனர். 20 கொள்கலன்களில் பெற்றோல் நிரப்பி, ஒரு லிட்டர் பெற்றோல் €3.50 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இத்தகவலை அறிந்துகொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் எரிபொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. இன்று திங்கட்கிழமை நிலவரப்படி இல் து பிரான்சுக்குள் எரிபொருள் இல்லாமல் 40% வீதமான நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.