பாரிஸ் பகுதியில் வேலை ஒன்று தேடி சென்ற பிரான்ஸ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.ஒரு வேலையை முடித்துவிட்டு இன்னொரு புதிய வேலைக்காக இன்னொருவர் ஊடாக ஒருவரை சந்திக்க போன போதே காணாமல் போயுள்ளார்.

பின்னர் அடுதடுத்த நாட்களில் அவர் பொலிஸில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.சம்பவ தினத்தன்று குறித்த நபர் தனது வேலையை முடித்து விட்டு இரவு பேருந்தில் புதிய வேலைக்காக தனது நண்பர் சொன்னவரை பார்க்கலாம் என்று சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது பஸ்ஸில் பயணித்த ஒருவர் ட்ரைவரை கத்தியால் குத்தியுள்ளார்,

பிரச்சினையில் சிக்கிய பஸ்ஸை பொலிசார் கைப்பற்றி பயணிகள் அனைவரையும் காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.அதற்குள் சிக்கிய குறித்த தமிழ் இளைஞரும் சென்று விசாரணைகளை முடித்து கொண்டு அடுத்த நாள் வர அனுமதிக்கபட்டார்.

அண்மைகாலங்களில் இரவுநேர பேருந்துகளில்,இடங்களில் நடைபெறும் குற்ற செயல்கள் அதுகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.எனவே தமிழர்கள் இரவு நேர பயணங்களின் போது அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்