தனது முன்னாள் கணவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்டு 49 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிறு இரவு இச்சம்பவம் பரிசின் புறநகரான Pré-Saint-Gervais (Seine-Saint-Denis) இல் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 49 வயதுடைய பெண் ஒருவர் நேற்று இரவு தனது முன்னாள் கணவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் முன்னாள் கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர், அப்பெண் கத்தி ஒன்றினால் முன்னாள் கணவரின் கழுத்துப் பகுதியை வெட்டியுள்ளார்.

பின்னர் காவல்துறையினரை அழைத்த அப்பெண், தாம் தமது முன்னாள் கணவரை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் தொடர்பாக எதுவும் அறிய முடியவில்லை. அவர் RATP தொடருந்து நிறுனத்தின் ஊழியர் என அறிய முடிகிறது. அவரது சடலத்தினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் அளித்த அவரின் முன்னாள் மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.