பிரான்சுக்கு வழங்கும் எரிவாயுவின் அளவை அதிகரிக்க அல்ஜீரியா சம்மதித்துள்ளதாக அறிய முடிகிறது.
இதுவரை இதற்கான ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை என்றபோதும், அதற்கான பேச்சுவார்த்தை இரு நாட்டு தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. தற்போது அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதியுடன் உரையாடியதாக அறிய முடிகிறது.
இதுவரை பிரான்சுக்கு தேவையான எரிவாயுவில் 20% வீதத்தினை வழங்கி வந்திருந்த நிலையில், 50% வீத எரிவாயுவை வழங்க அல்ஜீரியா சம்மதித்துள்ளதாக அறிய முடிகிறது.