சிறியரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் Savoie மாவட்டத்தில் இன்று ஓகஸ்ட் 25, வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் நனிநபர் ஒருவருக்கு சொந்தமான விமானம் ஒன்றே விபத்துக்குள்ளானது. 50 வயது மதிக்கத்தக்க விமானி ஒருவரும், 10 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் விமானத்தில் பயணித்த நிலையில், திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளது.

பகல் 1.15 மணி அளவில் குறித்த விமானம் A430 நெடுஞ்சாலை அருகே விழுந்துள்ளது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர். விபத்துக்குரிய காரணங்கள் தொடர்பில் அப்பகுதி ஜொந்தாமினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.