Bobigny நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Henri-Gauthier வீதியில் உள்ள சேமிப்பகம் (entrepôt) ஒன்றே தீப்பற்றியுள்ளது. காலை 6.15 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

அப்பகுதியில் வசித்த சிலரும், சேமிப்பகத்தில் பணியாற்றும் சிலரும் உடனடியாக தீயணைப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. குறித்த சேமிப்பகம் தீப்பற்றியமைக்குரிய காரணம் குறித்து எதுவும் தற்போது அறிய முடியவில்லை