சற்று முன்னர் Roissy சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை காலை இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்களின் படி, ஆயுததாரி ஒருவன் காவல்துறையினரை கத்தி ஒன்றினால் தாக்க முற்பட்டுள்ளதாகவும், அதையத்து அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அறிய முடிகிறது.
2F முனையத்துக்கு அருகே (Terminal 2F) இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
ஆயுததாரியின் அடிவயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், பலமுறை ஆயுதத்தை கீழே போடும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும், அதன்பின்னரே அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
மேற்படி துப்பாக்கிச்சூட்டினால் விமான நிலையம் மிகுந்த பரபரப்புக்குள்ளாகியுள்ளது.