சென் நதியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்ட வெள்ளைத் திமிங்கிலம், சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 4.30 மணி அளவில் சென் நதியில் இருந்து மீட்கப்பட்ட குறித்த திமிங்கிலத்தை, ஆங்கில கடற்பபரப்பில் விடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் துரதிஷ்ட்டவசமாக குறித்த திமிங்கிலம் உயிரிழந்துள்ளது.

சென் நதிக்குள் நுழைந்த குறித்த திமிங்கிலம் கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என தெரிவந்துள்ளது. அதற்கு உணவு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

மேற்படி சம்பவம் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

உடற்கூறு பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.