பிரான்ஸ்: Vénissieux இல் காவல் துறையினருக்கு இணங்க மறுத்த வாகனம் ஒன்றின்‌ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது! இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் அடைந்தார் மற்றொருவருக்கு கடுமையான காயம் ஏற்படுட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! லியோன் அருகே திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட வாகனத்தை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர்.

டிரைவர் வாகனத்தை நிறுத்த மறுத்ததால், போலீசார் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். Lyon புறநகர் பகுதியான Vénissieux (Rhône) இல் வியாழன் இரவு, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார் மற்றும் மற்றொருவர் மூளைச்சாவு அடைந்தார்.Lyon வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, Carrefour de Vénissieux இல் கார் நிறுத்துமிடத்தில் கார் நின்றிருந்தது.

ஆனால், காவல்துறையினரின் தகவலின்படி, வாகன ​​​​ஓட்டுனர், கட்டுப்படுத்த மறுத்து, அதிகாரிகளை நோக்கி விரைந்தார் மற்றும் அவர்களில் ஒருவரைத் தாக்கினார் எனவே துப்பாக்கி சூட நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.‌நான்கு போலீஸ் அதிகாரிகளில் இருவர் தங்கள் ஆயுதத்தை பல முறை பயன்படுத்தினார்கள் என்று வழக்குத் தொடரிலிருந்து ஒரு செய்திக்குறிப்பு குறிப்பிடுகிறது.

போலீசார் முதலுதவி அளித்த போதிலும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த டிரைவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர், காலையில், மூளைச்சாவு அடைந்த நிலையில் இருந்தார். மேலும் காவலரின் கால்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தகவலின்படி உயிரிழந்த பயணி 20 வயதுடையவர் எனவும், சாரதிக்கு 26 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணி திருட்டு மற்றும் ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.