பரிசில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘பரிசில் இரண்டு பெரும் குற்றங்கள் மலிந்துள்ளன. போதைப்பொருள் விற்பனை மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள். இதுபோன்ற குற்றங்கள் மக்களின் சாதாரண வாழ்க்கையை முற்றாக சீரழிக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது’ என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, ‘இந்த குற்றங்களுக்கு எதிராக மிக பலமான, இறுக்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும். பரிசுக்கு ஏற்பட்டுள்ள இந்த காயத்தினை நாம் குணப்படுத்தவேண்டும்!’ எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று, ஓகஸ்ட் 24 ஆம் திகதி புதன்கிழமை, பரிஸ் காவல்துறை தலைமையதிகாரி மற்றும் காவல்துறையினரை உள்துறை அமைச்சர் சந்தித்தார். அதன்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

***

அதேவேளை, இவ்வருடத்தில் 2,778 போதைப்பொருள் தடுப்பு பணியினை காவல்துறையினர் மற்றும் சுங்கவரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 4.5 தொன் எடைகொண்ட போதைப்பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு குற்றச் செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்ப்ட்டு இதுவரை 128 பேர் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டார்.