Maisons-Alfort என்னும் இடத்தில் 19 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் கற்பழிக்கப்பட்டார்! Maisons-Alfort இல் உள்ள தனது வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, இளம் பெண் இரண்டு ஆண்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். ‌அவர்களில் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து, தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. Maisons-Alfort இல் உள்ள rue Pelet-de-la-Lozère இல் உள்ள அவரது வீட்டில் 19 வயது இளம் பெண் சனிக்கிழமை காலை அவரது படுக்கையில் கற்பழிக்கப்பட்டுள்ளார். Val-de-Marne இன் நீதித்துறைப் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கற்பழிப்புக்கான தீவிர விசாரணை தொடங்கப்பட்டது! இளம் பெண் அவசரகால சேவைகளால் கவனித்துக் கொள்ளப்பட்டார், அவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு கொள்ளையர்களும் பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து கணினி, மொபைல் போன் மற்றும் காபி இயந்திரம் போன்ற பல்வேறு பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.