இன்று செவ்வாய்க்கிழமை காலை பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
13 ஆம் வட்டாரத்தின் rue Tolbiac வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே தீக்கிரையாகியுள்ளது. இங்குள்ள 9 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று, இன்று ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை 6.30 மணி அளவில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, கட்டிடத்தில் தங்கியிருந்த பலர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
100 பேர் வரை வெளியேற்றப்பட்டனர். மூன்று தளங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக அறிய முடிகிறது. விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியதற்குரிய காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை