மருந்தகங்களில் குரங்கு அம்மை தொற்றுக்கு தடுப்பூசி போடுவதில் சுகாதார அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
சுகாதார அமைச்சர் பிரான்சுவா பிரவுண் இதனை நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். பிரான்சின் மூன்று மாகாணங்களில் உள்ள ஐந்து மருந்தகங்கள் (pharmacies) இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Ile-de-France, Provence-Alpes-Côte d'Azur மற்றும் Hauts-de-France ஆகிய மூன்று மாகாணங்களில் இருந்து இந்த ஐந்து மருந்தகங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, கொவிட் 19 வைரஸ் பரவல் தீவிரமடைந்திருந்தபோதும், மருந்தகங்களில் தடுப்பூசி போடும் முறையை அரசு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.