Hauts-de Seine மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இரட்டை பாலியல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார்.
கடந்த ஜூலை 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Max Fourestier (Nanterre) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரு வயோதிப பெண்கள் அடுத்தடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காலை 9.30 மணி அளவில் 78 வயதுடைய பெண் ஒருவவரும், 10 மணி அளவில் 68 வயதுடைய பெண் ஒருவருவம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி செயலில் ஈடுபட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், Nanterre நகர காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.