Méry-sur-Oise (Val-d’Oise) நகரில் உள்ள கல்லூரி கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

Jacques-Yves Cousteau எனும் கல்லூரி வளாகத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை நண்பகல் கல்லூரி இயங்கிக்கொண்டிருந்த போது, அக்கல்லூரியின் உணவுக்கூடத்தில் திடீரென பலத்த தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ கட்டுப்பாடில்லாமல் மிக வேகமாக பரவியுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், குறித்த உணவுக்கூடம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு படையினர் குறிப்பிட்டனர்.

உணவுக்கூடத்தின் கூரை முற்றாக இடிந்து விழுந்துள்ளது. மேலும் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும், தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.