பூங்கா ஒன்றுக்குள் மிக ஆபத்தான பாம்பு நுழைந்ததை அடுத்து, பொதுமக்கள் பூங்காவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Marseille மாவட்டத்தின் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Pastré எனும் பூங்காவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த பூங்கா நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது. மிக ஆபத்தான விஷமுடைய பாம்பு ஒன்று பூங்காவுக்குள் நுழைந்து, மாயமாகியுள்ளது எனவும், அதனை பிடிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும், அதுவரை அப்பூங்காவுக்குள் பொதுமக்கள் எவரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்பு ஒரு சிலரால் நேரடியாக பார்க்கப்பட்டுள்ளது எனவும், 1.5 மீற்றரில் இருந்து 3.5 மீற்றர் வரை நீளமுடையது எனவும், 16 கிலோ வரை எடை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்பு எங்கிருந்து பூங்காவுக்குள் நுழைந்தது என்பது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை