ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் விடுமுறைக்காக Brégançon (Var) நகருக்குச் சென்றுள்ளனர்.

அங்கு பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஓய்வெடுப்பதெற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக தீவான Brégançon இல் அவர்கள் தங்கியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் அங்கு சென்றடைந்துள்ளனர். அடுத்து வரும் சில நாட்கள் அவர்கள் அங்கு ஓய்வெடுக்க உள்ளனர். அதேவேளை, ஜனாதிபதி மக்ரோன் அங்கிருந்துகொண்டு சில கடமைகளை ‘காணொளி’ அழைப்பு ஊடாக மேற்கொள்ளுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டுகளிலும் ஜனாதிபதி மக்ரோன் அங்கிருந்துகொண்டு தனது கடமைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.