Île-de-France மாகாணத்துக்கும் நிலவ உள்ள அதிக மாசடைவு காரணமாக நாளை புதன்கிழமை பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன.
அதன்படி, தலைநகர் பரிஸ் உட்பட பல புறநகர் வீதிகளிலும் போக்குவரத்து வேகம் குறைக்கப்பட உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட 20 கி. மீ வேகம் குறைக்கப்பட உள்ளது.
அத்தோடு அதிக மாசடைவை ஏற்படுத்தக்கூடிய டீசல் வானங்கள் பயணிக்கவும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
இலவச தரிப்பிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும், எளிதில் சுகவீனம் அடையக்கூடியவர்கள், முதியவர்கள் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கும் படியும், வெளிப்புற விளையாட்டுக்களை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை Île-de-France இற்குள் அதிகூடிய வெப்பம் நிலவ உள்ளது. அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பலத்த மாசடைவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.