நவம்பர் 13 தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சாலா அப்தெல்சலாம் பெல்ஜியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

Fleury-Mérogis (Essonn) சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த அவன், இன்று ஜூலை 13, புதன்கிழமை காலை பெரும் பாதுகாப்புடன் பெல்ஜியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். GIGN அதிரடிப்படையினரால் சிறப்பு விமானம் மூலம் பெல்ஜியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிறைவைக்கப்பட உள்ளான்.

நவம்பர் 13 (2015) தாக்குதலில் தொடர்புடைய சாலா அப்தெல்சலாம், 2016 மார்ச் மாதத்தில் பெல்ஜியத்தின் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கும் காரணமாவான். அந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனால் பெல்ஜியத்தில் அவன்  சிறப்பு  நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளான்.

பெல்ஜியத்தில் வரும் 2023 ஆம் ஆண்டு கோடைகாலம் வரை நீதிமன்ற விசாரணைகள் தொடரும் எனவும், அதன் பின்னர் மீண்டும் பிரான்சுக்கு அழைத்துவரப்பட உள்ளான் எனவும் அறிய முடிகிறது.