பிரான்சில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 6.1 வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 5.8% வீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 6.1% வீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலை அரசாங்கத்தால் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததாலும், உணவுப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இரஷ்யா-உக்ரைன் யுத்தம் இந்த பணவீக்கத்துக்கு பிரதான காரணம் எனவும், எரிபொருட்களின் தட்டுப்பாட்டினால் உணவு ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் சிரமம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, உணவுப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது.