பிரான்சில் கடந்த வாரங்களில் நிலவிய வெப்பம் காரணமாக நால்வர் மரணித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரான்சில் இம்மாத ஆரம்பத்தில் இருந்து நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் கடும் வெப்பம் நிலவியிருந்தது. இந்த காலப்பகுதிக்குள் 45 செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்த கடுமையான வெப்பம் காரணமாக பிரான்சில் நால்வர் மரணமடைந்துள்ளதாக Santé publique France அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டில் வெப்பம் காரணமாக பிரான்சில் 12 பேர் மரணத்திருந்ததாகவும் பொது சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.