பிரான்ஸின் தேசிய அரசு போக்குவரத்து நிறுவனமாகிய
எஸ்என்சிஃஎப் (Société nationale des chemins de fer Français- SNCF) தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி நடத்துகின்ற வேலை நிறுத்தம் காரணமாக இன்று புதன் கிழமை (ஜூலை 6) ரயில் சேவைகள்
ஸ்தம்பித்துள்ளன.
பாரிஸ் பிராந்திய ரயி்ல சேவைகள்
மற்றும் நாட்டுக்குள் இடம்பெறுகின்ற தூர இடத்து ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருப்பதால்
பெரும் பயணிகள் நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பாரிஸில் ஆர்ஈஆர்
(RER) ரயில் இணைப்புகளில் B, C, D, E ரயில் சேவைகளும் J, L, N, R, U ஆகிய Transilien ரயில் சேவைகளும்
குறைக்கப்பட்டுள்ளன.
தூர இடங்களுக்கான TGV, TER Ouigo ரயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால்
விடுமுறையில் செல்ல இருந்தவர்களது பயணங்கள் தடைப்பட்டுள்ளன. பாடசாலைகள் கோடை விடுமுறைக்காக மூடப்படுவதை அடுத்து விடுமுறை
யில் செல்லும் பயணிகளது எண்ணிக்கை இந்த வாரம் மிகவும்
உயர்ந்துள்ளது. இந்த நிலையில்
இன்றைய வேலை நிறுத்தம் பயணத்
திட்டங்களைக் குழப்பியுள்ளது.
கடந்த வாரம் பாரிஸ் சர்வதேச விமான நிலையப் பணியாளர்கள்
நடத்திய பணிப் புறக்கணிப்புக் காரணமாக அங்கு பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.