பிரான்சின் மின்சார வாரியம் (Électricité de France - EDF) முற்று முழுதாக அரசுடமையாக்கப்பட உள்ளதாக பிரதமர் Elisabeth Borne அறிவித்திருந்தார். இதனால் மின்சார கட்டணத்தில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரெஞ்சு மின்சார வாரியத்தில் 85 வீதமான பங்கை அரசு வைத்துள்ளது. இதனை முற்று முழுதாக அரசுடமை ஆக்கும் முயற்சியில் அரசு களமிறங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை பிரதமர் Elisabeth Borne இதனை பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.
இந்நிலையில், இந்த மின்சார வாரியம் அரசுடமை ஆவதால் மின்சார கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அரச ஊடக பேச்சாளர் Olivier Veran அறிவித்தார்.
அதேவேளை, பிரான்ஸ் மேலும் பல புதிய அனு உலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், பிரெஞ்சு அரசு மின்சார வாரியத்துக்காக புதிய நிர்வாக தலைமை அதிகாரியை (CEO) தேடிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.