இரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை முற்றாக நிறுத்துவதற்கு பிரான்ஸ் தயாராகி வருவதாக பிரான்சின் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire தெரிவித்துள்ளார்.
இரஷ்யாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிரான்ஸ் இந்த முடிவை எட்டியுள்ளது.பிரான்சுக்கு தேவையான எரிவாயுவில் 17 வீதமானவை இரஷ்யாவில் இருந்து வாங்கப்படுகிறது. இதனை முற்றாக நிறுத்துவதற்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது எனவும், அது சாத்தியமானது எனவும் அமைச்சர் Bruno Le Maire இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தெற்கு பகுதியில் இன்று இடம்பெற உள்ள பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அமைச்சர் Bruno Le Maire, சற்று முன்னர் இதனை தெரிவித்தார்.