Goussainville நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை, மாலை இச்சம்பவம் Goussainville (95) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Avenue du 6 juin 1944 வீதியில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். சிறிய ரக மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி அவர்கள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்களின் ஒருவன், வீதியில் நடந்துசென்ற சிறுமி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதியுள்ளான்.

இச்சம்பவத்தில் குறித்த 3 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். மருத்துவக்குழுவனர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்ததுடன், அவரை பரிஸ், 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதித்தனர்.