பிரான்ஸிலுள்ள பாரிஸ் நகரில் கிச்சா எனும் மது பான கடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கிச்சா என்ற மதுபான கடையில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் எதிர்பாராத தருணத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனை அர்ராண்டிசெமென்ட் மேயர் பிரிங்காயிஸ் வாக்களின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இந்த காட்டு மிராண்டி தனமான செயலை செய்ததற்கான உள் நோக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை அத்தோடு துப்பாக்கி சூடு நடத்தி தப்பியோடிய மற்றொரு நபரை தேசிய பொலிஸார் தேடி வருகின்றனர்.