Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்ததில், இரு சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Coupvray நகரில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் இரு குடும்பங்கள் வசித்த நிலையில், அவர்களில் சிலர் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர். ஆனால் வீட்டுக்குள் 8 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகள் சிக்கிக்கொண்டுள்ளனர்

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் நிலமை கைமீறிச் சென்றுள்ளது.

தீக்குள் சிக்கி குறித்த இரு சிறுமிகளும் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு பெண்ணும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீ விபத்தில் இரு சிறுமிகள் பலியானமை அப்பகுதி மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.