டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அமைந்துள்ள பிரபல ஃபீல்ட்ஸ்(Field's mall) வணிக வளாகத்தினுள்ளே நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர்
காயமடைந்துள்ளனர். நகரின் தெற்குப் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வணிக வளாகத்தின் உள்ளே இன்றுமாலை
நடந்த இந்தத தாக்குதல் தொடர்பாக
விவரமான தகவல்கள் எதிர்பார்க்கப்
படுகின்றன.
வணிக வளாகத்தின் உள்ளே சூட்டுச் சத்தங்களும் பொதுமக்கள்
அலறியடித்து ஓடுகின்ற காட்சிகளும் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. வெளியே ஆயுதம் தாங்கிய பெரும் எண்ணிக்கையான பொலீஸ் படைகளும் அம்புலன்ஸ் வண்டிகளும் காணப்படுகின்றன
என்று செய்தியாளர்கள் தெரிவித்
துள்ளனர். நபர் ஒருவரைப் பொலீஸார் கைது செய்து தரையில்
இருத்தி வைத்திருந்த காட்சிகளை
ரீவி2 தொலைக்காட்சி வெளியிட்டுள்
ளது.
சம்பவம் நடந்த பகுதியூடாகச் செல்கின்ற மெற்றோ ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்
பட்டன.அம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று வானத்தில் வட்டமிட்டபடி
இருந்தது. நகரின் நெருக்கடிகால
சேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் உடனடியாகத் தெரிய
வரவில்லை.