யூரோவின் மதிப்பு 20 ஆண்டுகளின் பின்னர் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு சமமாக யூரோ வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியின் பின்னர் €1 யூரோவின் மதிப்பு $1 அமெரிக்க டொலருக்கு சமமாக உள்ளது. நேற்று ஜூலை 12, செவ்வாய்க்கிழமை நண்பகல் இந்த மதிப்பு கணக்கிடப்பட்டதாக ஐரோப்பிய மத்திய வங்கி (Banque centrale européenne (BCE) ) அறிவித்துள்ளது.
இரஷ்ய-உக்ரைன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ஐரோப்பா பெரும் பணவீக்கத்துக்குள் சிக்கி தவிக்கிறது. இதனால் யூரோ, ஸ்விஸ் பிராங் போன்ற பணத்தின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இறுதியாக 2002 ஆம் ஆண்டு டொலர் ஒன்றினதும் யூரோ ஒன்றினதும் பெறுமதி சமமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.