பிரான்சில் குரங்கு அம்மைத் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 7 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின் படி பிரான்சில் இதுவரை 721 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Île-de-France மாகாணத்தில் 473 பேருக்கு குரங்கு அம்மைத்தொற்று ஏற்பட்டுள்ளது. Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குரங்கு அம்மைத் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து, அதற்காக தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. வரும் திங்கட்கிழமை ஜூலை 11 ஆம் திகதி இல் து பிரான்சுக்குள் ஒன்பது தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக பிராந்திய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஒரு வாரத்துக்கு முன்னர் 
Santé Publique France வெளியிட்டிருந்த தரவுகளின் படி பிரான்சில் 550 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.