நேற்றிரவு Vendée என்னும் இடத்தில் இருக்கும் விவசாயக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றி 32 000 கோழிகள் பலியானதாகத் தெரியவந்துள்ளது.
மாலை 8 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்ததாகத் தெரியவந்துள்ளது.
அவர்களின் வருகை மற்றக் கட்டடங்களுக்குத் தீ பரவுவதைத் தடுத்துள்ளது.
அதில் ஒன்று 2 000 லீற்றர் வாயு நிலையம் என்பது தெரியத்தக்கது.