பரிசின் தெற்கு புறநகரான Val-de-Marne மாவட்டத்தில் இருந்து 300 கிலோ கொக்கைன் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நண்பகலின் போது Charenton-le-Pont (Val-de-Marne) நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து இந்த போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டிருந்த நீண்டகால விசாரணைகளை அடுத்து, இந்த போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றினர்.
அதேவேளை, Bois de Vincennes நகரில் உள்ள வானக தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து 79 கிலோ கஞ்சா போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இரு போதைப்பொருட்களும் ஒரே குழுவுக்குச் சொந்தமானது எனவும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.