தலைநகர் பரிசில் பாதுகாப்பு கருதி 1,000 காவல்துறை அதிகாரிகளை மேலதிகமாக நியமிக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளர் எனவும், முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 காவல்துறையினர் பணிக்கமர்த்தப்படுவார்கள் எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். பரிஸ் காவல்துறையினருக்கு புதிய தலைமை அதிகாரியாக Laurent Nuñez இன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட நிகழ்வின் போது உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மில்லியன் கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் தலைநகர் பரிசில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கோடு இந்த மேலதிக அதிகாரிகள் நியமிக்கும் பணி இடம்பெற உள்ளதாகவும், அவர்கள் தங்களது சீருடையில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தியிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.