Charles-de-Gaulle விமான நிலையத்தில் உரிமை கோரப்படாமல் 17,000 இற்கும் மேற்பட்ட பொதிகள் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்த பொதிகள் இங்கு தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்காரணமாக விமான சேவை நிறுவனங்களுக்கும் பயணிகளுக்குமிடையே முறையான தொடர்பாடல் இல்லை என்பதால் இந்த பொதிகள் இங்கு தேங்கியுள்ளதாக அறிய முடிகிறது.
பல ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது உடமைகளை விட்டுச் சென்றுள்ளனர். இந்த பொதிகளை தவறவிட்ட பயணிகள் தங்களது அடையாளங்களைச் சமர்ப்பித்து மிக வேகமாக உடமைகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.