யூலை முதலாம் திகதியிலிருந்து உணவுச் சீட்டின் தொகை மாற்றம் அடைவதாக உணவகக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் அரசு தெரிவித்துள்ளது.

ஒரு நாளுக்கு 19€க்கு மேல் உணவுச் சீட்டு பயன்படுத்த முடியாது. இதுவரை எல்லைத் தொகை 38€வாக இருந்தது. இது மட்டுமின்றி வார இறுதியிலும் விடுமுறை நாட்களிலும் உணவுச் சீட்டுகளைப் பயன்படுத்த முடியாது.