சுகாதார அனுமதி அட்டை (Pass sanitaire) மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்தும், கடல்கடந்த பிரெஞ்சு மாவட்டங்களில் இருந்தும் பிரான்சுக்கு (Mainland France) வருவதற்கான ‘எல்லை’ பாதுகாப்புக்கு இந்த சுகாதார அனுமதி அட்டையினை பயன்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. கொவிட் 19 வைரஸ் பரவல் மீண்டும் பிரான்சில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த மீண்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
இருப்பினும் இது நடைமுறைக்கு வருவது தொடர்பான திகதிகளோ, அடுத்த கட்ட முடிவுகளோ இதுவரை எட்டப்படவில்லை. ஆனால் அரசு தரப்பில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த சுகாதார அனுமதி அட்டைகளை சேவையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை, சந்தைத் தொகுதி, வணிக வளாகம், திரையரங்கு, இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு அரங்குகள் போன்ற அதிகளவான மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல இந்த சுகாதார அனுமதி அட்டையினை பயன்படுத்துவது தொடர்பிலும் அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
அண்மைய தரவுகளின் படி பிரான்சில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 100.000 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்படுகிறமை குற்றிப்பிடத்தக்கது.