இளைஞன் ஒருவர் மோடார் சைக்கிளில் பயணித்த வேளையில் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார். படப்பிடிப்பு ஒன்றுக்காக மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவம் விபரீதமாகியுள்ளது.
Essonne மாவட்டத்தில் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Milly-la-Forêt பகுதியில் இளைஞர்கள் சிலர் இணைந்து படப்பிடிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதில் இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மகிழுந்துகளில் மோதியுள்ளார்.
விபத்துக்குள்ளான இளைஞன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளான்.
மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இளைஞன் விபத்தில் சிக்கியதாக அறிய முடிகிறது. அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பிராந்திய ஜொந்தாமினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.