ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நள்ளிரவில் வீதி ஒன்றில் தனியே நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற Rue de Rivoli வீதியில் மக்ரோன் நடந்து செல்லும் போது மேற்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 19 ஆம் திகதி அன்று, இரவு 11.30 மணி அளவில் இம்மானுவல் மக்ரோன் எவ்வித பாதுகாப்பும் இன்றி - மெய்பாதுகாவலர்களும் இல்லாமல் தனியே நடந்து சென்றுள்ளார்.

பாதசாரி கடவையில் மக்ரோன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு செல்வது போன்ற குறித்த புகைப்படத்தை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ புகைப்படக்கலைஞர் Soizic de la Moissonnière படம் பிடித்துள்ளார். பின்னர் அவரே தனது இன்ஸ்டகிராம் சமூகவலைத்தள கணக்கினூடாக மே 30 ஆம் திகதி அன்று பகிர்ந்திருந்தார்.

ஜனாதிபதி மெய்பாதுகாவலர்கள் இல்லாமல் தனியே சென்றமை தொடர்பாக பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன