பிரித்தானியாவின் வாண்ட்ஸ்வொர்த் போரோக வுன்சிலின் இந்த ஆண்டுக்கான துணை மேயராக சர்மிளா வரதராஜ் ( Sarmila Varatharaj) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

துணை மேயர் சர்மிளா வரதராஜ், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவர்) பட்டம் பெற்றார்.

சர்மிளா வரதராஜ் வாண்ட்ஸ்வொர்த் சபையின் துணை மேயராக தெரிவு!

அவர் Burntwood பாடசாலையில் மாணவியாக இருந்த காலத்திலிருந்தே மனித உரிமைகள் ஆர்வலராக இருந்துள்ளார்.

அவர்  ஈழத்தில்   சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்பிற்கு எதிராக செயல்படும் பிரித்தானிய தமிழர்கள் மன்றத்திற்கு தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினார்.