நபர் ஒருவரை சென் நதிக்குள் தள்ளிவிட்ட இரு திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு Quai des Orfèvres மற்றும் the Saint-Michel மேம்பாலம் சந்திக்கும் முனையில் இடம்பெற்றுள்ளது. இரு திருடர்கள் 28 வயதுடைய ஒருவரிடம் இருந்து அவரது பணப்பையை திருட முற்பட்டனர். அதையடுத்து திருடர்களுக்கும் அந்நபருக்கும் மோதல் வெடித்தது. அதன் முடிவில் திருடர்கள் இருவரும் அந்நபரை நதியில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
நதியில் விழுந்து மூழ்கிய நபர் மீட்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது உயிருக்கு ஆபத்துக்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தப்பி ஓடிய இரு திருடர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.