Montparnasse தொடருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இன்று, ஜூன் 3, வெள்ளிக்கிழமை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தொடருந்தில் வந்திறங்கி நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டான். போதைப்பொருள் கடத்தலில் சந்தேகிக்கப்படும் குறித்த இளைஞன் வைத்திருந்த பை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது. அப்போது அதற்குள் தானியங்கி பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றும், ரைபிள் துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது.
குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளில் குறித்த நபர், இந்த பையில் ஆயுதம் இருப்பது தமக்கு தெரியவில்லை எனவும், பணம் கொடுத்து இதை ஒருவரிடம் கையளிக்கும் படி நீஸ் (Nice) நகரில் ஒருவர் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது