வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு : தேர்தலுக்குப் பின் உதவித் திட்டம் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் நாட்டு மக்களது வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் பாதிப்பைக் குறைப்பதற்கான விதிகள் அடங்கிய சட்ட மூலம் கொண்டுவரப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

பணவீக்கம்,விலை அதிகரிப்புப் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிர்வரும் கோடை விடுமுறைக் காலத்தில் உதவிகளை வழங்குவதற்கு இச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 12-19 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. கடும்போக்கு இடதுசாரியாகிய ஜோன் – லூக்-மெலன்சோன் தலைமையிலான இடதுசாரிகளது புதிய கூட்டணி இம்முறை அதிபர் மக்ரோனின் கட்சிக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.