பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில்
(Louvre Museum) உள்ள உலகப் புகழ் மொனோலிஸா ஓவியத்தின் கண்ணாடிக் கூண்டின் மீது நபர்
ஒருவர் கிறீம் கேக்கை வீசி அசிங்கப்படுத்திய காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஞாயிறன்று அருங்காட்சியகத்தில் ஏராளமானவர்கள் ஓவியத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், சக்கர நாற்காலி ஒன்றில் வந்த நபர் ஒருவரே மொனோலிஸா ஓவியம் மீது உருகும் கேக் துண்டு ஒன்றினை வீசியுள்ளார்.அது கண்ணாடி மீது படிந்து ஓவியத்தை மறைக்கின்ற காட்சியைப் பலரும் வீடியோப் பதிவு செய்தனர். பாதுகாவலர்கள் உடனடியாக அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றிய காட்சியும் அதில் காணப்படுகிறது.

சுற்றுச் சூழல் பாதிப்புகள் மீது கவனத்தைக் கோரும் நோக்குடனேயே
தான் இந்தச் செயலைப் புரிந்தார் என்று
அந்த நபர் பின்னர் கூறியிருக்கிறார்.
36 வயதுடைய அந்த ஆண் ஒரு வயோ
திபப் பெண் போன்று தோன்றும் விதமாக ஆடை அணிந்திருந்தார் என்று
கூறப்படுகிறது.

"பூமியைப் பற்றிய சிந்தியுங்கள் - பலரும்
அதன் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் - அது பற்றிச் சிந்தியுங்கள்.
ஓவியர்கள் பூமியைப் பாதுகாக்குமாறு
கோருவதைக் கவனத்தில் கொள்ளுங்
கள். அதற்காகவே நான் இச் செயலைப்
புரிந்தேன்" - என்று அந்த நபர் தெரிவித்
திருக்கிறார். 

ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் (Leonardo da Vinci) 16 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட  மொனோலிஸாவின்
இந்த மூலப் பிரதி ஓவியம், 1950 இல் ஒருமுறை அசிட் வீச்சுக்கு இலக்கானது. 2009 இல் ரஷ்யப் பெண் ஒருவர் தனக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து, ஓவியம் மீது குவளை ஒன்றை வீசித் தாக்கியிருந்தார்.