பரிசில் உள்ள தரிப்பிடங்களில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு தரிப்பிடக்கட்டணம் செலுத்தவேண்டும் என நகரசபை அறிவித்துள்ளது.
இதுவரை மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அறவிடப்பட்ட தரிப்பிடக்கட்டணம், மோட்டார் சைக்கிள்களுக்கும் அறவிடப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
பெற்றோல் மற்றும் டீசல்களில் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தரிப்பிடக்கட்டணம் அறவிடப்பட உள்ளது. மின்சார ஸ்கூட்டர்களுக்கு இது பொருந்தாது.
தரிப்பிடக் கட்டண தொகை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.