கடந்த மே மாதத்தில் பிரான்சில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 293 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மகிழுந்து சாரதிகள், மோட்டார் சைக்கிள் சாரதிகள், மிதிவண்டி சாரதிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளடங்கலாக மொத்தம் 293 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த 293 பேரில் 130 பேர் மகிழுந்து சாரதிகளும், 92 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ஆவர்.
அதேவேளை, முந்தைய ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 262 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதேபோன்று, 2021 ஆம் ஆண்டு மே மாதத்தை விடவும் இவ்வருட மே மாதத்தில் அதிகளவானோர் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.